David Paul Samson wrote:
தவறு.
இவை, அவை, போன்றவை, எவை என்பதிலேயே பன்மை உள்ளது.
அப்புறம் எதற்கு இவை'கள்', அவை'கள்', போன்றவை'கள்' எவை‘கள்’?
மொழிப் பயன்பாட்டில் மோசமான தவறுகளில் ஒன்று ஒருமை, பன்மை பாகுபாடு தெரியாத இந்தப் பயன்பாடு.
இதே போல்தான் ‘இவைகளை, அவைகளை, போன்றவைகளை, எவைகளை’ என்றெல்லாம் நிறைய பேர் எழுதுகிறார்கள். ‘இவற்றை, அவற்றை, போன்றவற்றை, எவற்றை’ என்று எழுதுவதுதான் சரி.
- சாத்தனார்